கொரோனா நோயாளிகளின் விருப்பத்திற்காக பிரியாணி வழங்க ஏற்பாடு செய்த அமைச்சர்!

கொரோனா நோயாளிகளின் விருப்பத்திற்காக பிரியாணி வழங்க ஏற்பாடு செய்த அமைச்சர்!
  • Share this:
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கொரோனா நோயாளிகளின் விருப்பத்திற்காக பிரியாணி வழங்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.

புதுச்சேரியின் சுகாதார துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாமில் மேற்கொள்ளப்படும் கொரோனா நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

ஏனாமில் நோய் பாதிப்பே இல்லாமல் இருந்தது. ஊரடங்கு தளர்விற்கு பின் ஒன்று, இரண்டு என பாதிப்பு எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் வழங்கப்படும் உணவு தங்களுக்கு பிடிக்கவில்லை என நோயாளிகள் வாட்ஸ்அப்பில் பதிவிட்டனர். பலர் பிரியாணி வேண்டும் என கேட்டு இருந்தனர்.


Also read... சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பின் நிலை என்ன? மகிழ்ச்சி தரும் தகவல்கள்

இதைப்பார்த்த அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தான் நடத்தும்  ஏனாம் முதியோர் இல்ல அறக்கட்டளை மூலம் கொரோனா நோயாளிகள் விரும்பும் உணவை வழங்க ஏற்பாடு செய்தார்.

இதன்படி ஒரு நாள் பிரியாணி, மற்ற நாட்கள் சாதத்துடன் சிக்கன், மட்டன், 2 முட்டை, வாழைப்ப்ழம், பப்பாளி   உள்ளிட்ட பழங்களுடன், பல வகையான கூட்டு, பொரியல் வழங்கப்படுகிறது.மேலும்  கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கும் மக்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை சாப்பிட்டவர்கள் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஏனாம் முதியோர் இல்ல அறக்கட்டடளையிலிருந்து தினந்தோறும் 800 முதல் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading