ஊரடங்கு உத்தரவால் வீட்டில் உள்ளவர்கள் என்ன உணவுகளைச் சாப்பிடலாம்? - மருத்துவர் விளக்கம்..!

  • Share this:
கொரோனா பாதிப்பால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக 21 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். உடல் உழைப்பு இருக்காது என்பதால் உடல் எடை அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் நம்மில் பலருக்கு இருப்பது இயல்புதான். அதை எப்படி எதிர்கொள்வது?... என்ன சாப்பிடலாம்? 

கொரோனா அச்சம் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கோடை வெயில் தனது பணியை தொடங்கிவிட்டது. ஏசி, மின்விசிறி என சகல வசதிகளுடன் வீட்டிற்குள்ளேயே 21 நாள் நாம் முடங்கிக் கிடந்தாலும் அதிக அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் என்கிறார் பொதுநல மருத்துவர் பன்னீர்செல்வம். பஜ்ஜி, போண்டா போன்ற நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக காய்கறிகள், ஆப்பிள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தும் அவர் அவற்றை எப்படி கையாள வேண்டும் எனவும் வழிகாட்டுகிறார்.

21 நாட்களும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதால் அனைவரது உடல் உழைப்பும் வெகுவாக குறைகிறது. இதனால் உணவு செரிமானம் குறைந்து அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க குழந்தைகள் முதல் முதியவர் வரை எவ்வளவு உணவு சாப்பிட வேண்டுமென்று எடுத்துக்கிறார் டயடீசியன் தாரணி.


காலை, மதியம், இரவு நேர உணவு தவிர்த்து அவ்வப்போது சிற்றுண்டிகளையும் எடுத்துக்கொள்ளலாம். இவை துரித உணவுகளாக இல்லாமல் உடல் ஆரோக்கியத்தை காக்கும் உணவாக இருப்பது அவசியம் என்று கூறும் தாரணி அதற்காக டிப்ஸ்களையும் வழங்குகிறார்.

சத்தான உணவு மட்டும் நமக்கு ஆரோக்கியத்தை தந்துவிடாது. உடற்பயிற்சி, யோகா என ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துவதன் மூலமாக மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட முடியும்.

வீட்டை சுத்தப்படுத்த நேரமில்லை என இதுநாள் வரை புலம்பி வந்த இல்லத்தரசிகள், இந்த 21 நாளையும் அதற்காக பயன்படுத்துவதுடன் கணவர், குழந்தை என அனைவரையும் இதில் ஈடுபடுத்தி பொழுது போக்குவதும் கூட மன அழுத்தத்தை குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.Also see...

First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்