புதுச்சேரியில் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி - கல்வி துறை அறிவிப்பு

புதுச்சேரியில் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி - கல்வி துறை அறிவிப்பு
  • Share this:
புதுச்சேரியில் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக கல்வி துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் முழுஆண்டு தேர்வு நடத்த இயலாத காரணத்தால் புதுச்சேரியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு அறிவித்துள்ளார்.

ஏற்கனவே புதுச்சேரியில் பள்ளி -கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் முழு ஆண்டு தேர்வு நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விடுமுறை  நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Also see...
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading