இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 84 லட்சத்து 41 ஆயிரத்து 986 ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் 2,887 பேர் உயிரிழந்துள்ளதால், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 3,37,989 ஆக அதிகரித்துள்ளது. புதியதாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 499 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நாடு முழுவதும் தற்போது 17 லட்சத்து 13 ஆயிரத்து 413 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரேநாளில் 24 லட்சத்து 26 ஆயிரத்து 265 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இதுவரை 22 கோடியே10 லட்சத்து 43 ஆயிரத்து 693 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தெலங்கானா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை, 37 ஆயிரத்து 332 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா முதல் அலையில் 19 ஆயிரத்து 824 சிறுவர்கள் பாதிக்கப்பட்டதாகவும், குழந்தைகளிடம் பரவும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு, மருத்துவ வல்லுநர்களுடன் தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல ஆந்திரா மாநிலத்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 23,920 சிறுவர்களுக்கு
கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில் 2,209 பேர் ஐந்து வயதுக்கும் குறைவானவர்கள் ஆவர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி பகுதியில் 4,200 சிறுவர்களும், சித்தூர் மாவட்டத்தில் 3,800 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கொரோனா தொற்றின் தினசரி எண்ணிக்கை 568 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், திடீரென எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
உத்தர பிரதேச மாநிலத்தில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா தெரிவித்தார். கர்நாடகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜுன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Must Read : செமஸ்டர் தேர்வு, மறு தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்
இந்நிலையில்,
தமிழகத்தில் புதிதாக 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32,221 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 460 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.