• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னை ஐஐடியில் கொரோனா தடுப்பு மையம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை ஐஐடியில் கொரோனா தடுப்பு மையம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை ஐஐடி (கோப்புப்படம்)

சென்னை ஐஐடி (கோப்புப்படம்)

சென்னை ஐஐடியில் கொரோனா தடுப்பு மையம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

  • Share this:
    சென்னையில் நாளுக்கு நாள்  கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றது இந்த நிலையில் ஏற்கனவே பள்ளிகள் கல்லூரிகளில் கொரோனா தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றது.

    அந்த அடிப்படையில் தற்போது ஐஐடி யில் உள்ள சில மாணவர் விடுதிகளை கொரோனா தடுப்பு மையமாக மாற்ற சென்னை மாநகராட்சி ஐஐடி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது .

    சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் ஊழியர்கள், பேராசிரியர்களுக்கான குடியிருப்பு வளாகங்கள் உள்ளதால் அங்குள்ளவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Also read... கொரோனா தொற்று காரணமாக இந்தியாவிலேயே மோசமான பாதிப்பை சந்தித்த நகரம் எது?

    சென்னை ஐஐடியில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான விடுதி மாணவர்கள் ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதால் விடுதிகளை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்ற சென்னை மாநகராட்சிி முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: