இந்தியாவின் கொரோனா தடுப்பூசி Covaxin 3-ஆம் கட்ட சோதனையில் நுழைந்தது..

மாதிரி படம்

உலக அளவில் பல்வேறு நாடுகள் கொரோனோ தடுப்பூசி கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தியாவின் தடுப்பூசியை மூன்றாம் கட்ட சோதனையில் நுழைந்திருப்பது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி இரண்டுகட்ட சோதனையில் வெற்றிபெற்றதையடுத்து மூன்றாம் கட்ட சோதனையில் நுழைந்து கொரோனா தடுப்பூசி சோதனையில் சாதனை படைத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது
கொரோனாவிற்கு எதிராக இந்தியா தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி இரண்டு கட்ட சோதனையில் வெற்றி பெற்றதையடுத்து மூன்றாம் கட்ட சோதனை இந்தியா முழுவதும் 26,000 தன்னார்வலர்களுக்கு சோதனை செய்யப்பட உள்ளது

ஜூலை மாதம் 23 ஆம் தேதி இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது

இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் சென்னை காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தியா முழுவதும் நடத்திய சோதனையில்
தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 28 நாட்கள் கடந்தும் நலமுடன் உள்ளதால்  இரண்டாம் கட்ட சோதனைக்கு செல்ல தகுதி பெற்றது கோவாக்சின் மருந்து முதல் கட்டத்தில் 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்கள் உடலில் கோவாக்சின் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் கட்டத்தில் வயது வரம்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு 12 வயதுடைய இளம் பருவத்தினர் முதல் 65 வயது முதியவர்கள் வரை சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

முதற்கட்ட சோதனையில் எந்த பக்கவிளைவும் இல்லாத மருந்து என்று நிறுபிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட சோதனையில் நோய் எதிர்ப்பாற்றல் சோதனையும் செய்யப்பட்டது .

Also read... குளிர்காலத்தில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு.. மருத்துவர்கள் விளக்கம்..கடந்த ஐந்து மாதங்களாக நடந்த சோதனையில் கோவேக்சின் தடுப்பூசி அனைத்து சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் தல ஆயிரம் பேருக்கும் செய்யப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட சோதனை 26 ஆயிரம் பேர் வரை செய்யப்படவுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோவேக்சின்மூன்றாம் கட்ட சோதனையை தொடங்கவும் இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது. மொத்தம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள மனித உடல் சோதனையில் மூன்றாவது கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் கொண்டு சோதனை செய்யப்பட்ட பிறகு தடுப்பூசி  பயனுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது,

உலக அளவில் பல்வேறு நாடுகள் கொரோனோ தடுப்பூசி கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தியாவின் தடுப்பூசியை மூன்றாம் கட்ட சோதனையில் நுழைந்திருப்பது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: