தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிக உச்சத்தைத் தொட்டதில் இருந்து 20 நாட்களுக்குப் பின் 70 சதவீத தொற்று குறைந்து வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கடந்த 11 முதல் 17ம் தேதி வரை தொற்று உறுதியாவோர் விகிதம் 22.7 விழுக்காடாக இருந்த நிலையில், தற்போது 10.1 விழுக்காடாக குறைந்துள்ளது.
கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பிறகு, தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் தினமும் 20 முதல் 30 பேர் வரை மரணம் அடைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருப்பூரில் கடந்த ஒரு மாதத்தில் தொற்று பாதிப்பால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி 3,168 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், தற்போது 18, 700ஐ கடந்துள்ளது. இறப்போர் எண்ணிக்கையும் ஒரு மாதத்தில் 2 மடங்காக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் தினசரி 20 பேர் வரை உயிரிழக்கும் நிலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உடல்களை அப்புறப்படுத்துவதில் அலட்சியம் காட்டப்பட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள உடற்கூராய்வு அறைக்கு மூன்று சக்கர வண்டியில் உடல்களை வைத்து தள்ளிச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சடலங்களை கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த செய்தி நியூஸ் 18 தொலைக்காட்சியில் வெளியான நிலையில் விளக்கம் அளித்துள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை முதல் நிலை மருத்துவர் குமார், கொரோனாவால் இறந்தோரின் உடல்கள் முற்றிலுமாக மூடியே சாலை வழியாக கொண்டு செல்லப்படுவதாகவும், அதனால் தொற்று பரவாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா தொற்று குறைந்து வரும் வேளையில், கருப்பு பூஞ்சை தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 500 க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் உலிபுரத்தில் எஸ்.பி.ஐ. வங்கியில் பணியாற்றிய இளைஞர் கருப்பு பூஞ்சை பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வடசென்னையில் கொரோனா தொற்றாளர்களுக்காக ஆக்சிஜன் ஆட்டோவை தொடர்ந்து ஆக்சிஜன் இருசக்கர வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. தனியார் அமைப்புகள் இணைந்து தொடங்கியுள்ள இந்த சேவையில், 10 வாகனங்களில் தலா 10 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் தேவைப்படுபவர்களின் வீடுகளுக்கு சென்று ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Must Read : இந்தியாவில் கொரோனா தினசரி உயிரிழப்பு மூன்றாயிரத்துக்கும் கீழ் குறைந்தது
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்துவது குறித்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனைகளின் போது, தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக கொண்டு வரலாம் என நிபுணர்கள் பரிந்துரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், தமிழகத்தில் உரடங்கு தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.