கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே முற்றும் மோதல்!

கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே முற்றும் மோதல்!
அமெரிக்கா - சீனா
  • Share this:
கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் பரவலின் போது சீனாவுக்கு அமெரிக்கா வழங்குவதாக அறிவித்த 750 கோடி ரூபாய் நிதி உதவி இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என்று சீனா கூறியிருக்கிறது.

மேலும் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க ஆணையம் வழங்குவதாக அறிவித்திருந்த முக கவசம், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்தும் மார்ச் 11 ஆம் தேதி வரை தங்களுக்கு எந்தவிதமான தகவலும் வரவில்லை என்று சீனா கூறியுள்ளது.


தங்களது நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தங்களுக்கு உதவ முன் வந்ததற்கு நன்றி தெரிவித்து அமெரிக்காவிற்கு கடிதம் எழுதியுள்ள சீனா, உதவிப் பொருட்களை தற்போது நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு கொடுத்து உதவும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்