வெள்ளி, சனி அன்று வழக்கம்போல் கோயம்பேடு மார்க்கெட் இயங்கும்... அரசின் கோரிக்கையை ஏற்று வியாபாரிகள் சங்கம் முடிவு!

வெள்ளி, சனி அன்று வழக்கம்போல் கோயம்பேடு மார்க்கெட் இயங்கும்... அரசின் கோரிக்கையை ஏற்று வியாபாரிகள் சங்கம் முடிவு!
கோயம்பேடு மார்கெட்
  • Share this:
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை, வருகிற இரண்டு நாட்களுக்கு மூடப்படாமல், வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்களுக்கு, கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படும் என்று அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காய்கறி சந்தையை மூடினால், பொதுமக்களிடம் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதனால் மார்க்கெட்டை மூட வேண்டாம் என்றும் தமிழக அரசு சார்பில், வியாபாரிகள் சங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில், அரசின் கோரிக்கையை ஏற்ற வியாபாரிகள் சங்கம், நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம்போல் கோயம்பேடு மார்க்கெட் இயங்கும் என அறிவித்துள்ளது.


Also see...
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்