ஹோம் /நியூஸ் /கொரோனா /

ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - தமிழகத்தில் என்ன ஏற்பாடுகள்?

ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - தமிழகத்தில் என்ன ஏற்பாடுகள்?

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு இறுதிக்குள் 1.2 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது வரை 60 வயது மேற்பட்ட அனைவரும் 45 வயதுக்கு மேறட்ட இணை நோயாளிகளுமே தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். தற்போது எந்த இணை நோயும் இல்லாவிட்டாலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்.

உலக அளவில் இந்தியா அதிக கொரோனா தடுப்பூசி செலுத்திய மூன்றாவது இடத்தில் உள்ளது. சுமார் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை கணக்கில் கொண்டால் 100 பேரில் சுமார் 4 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 16-ம் தேதி முதல் சுகாதார பபியாளர்களுக்கும் பிப்ரவரி 2-ம் தேதி முதல் முன் களப்பணியாளர்களுக்கும் மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு இறுதிக்குள் 1.2 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இது வரை 25.39 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

Also read... தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இளைஞர்களிடம் அதிகம் உள்ளது

தற்போது 3,000 மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் 1900 மினி கிளினிக்குகளில் தடுப்பூசி மையங்கள் செயல்படும்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி மையத்துக்கு வரும் போது தங்கள் ஆதார் அட்டை கொண்டு வந்தால் மையத்தில் உள்ள ஊழியரே பதிவு செய்து தருவார். முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பின்னர் அங்கேயே தடுப்பூசி செலுத்தப்படும்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Central government, Corona Vaccine