கொரோனா பணியில் இருக்கும் 16 ஆயிரம் தற்காலிக ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார்

நாளை சம்பளம் வழங்கப்படும் என தினசரி சொல்கின்றனர்; எப்பொழுது சம்பளம் வழங்கப்படும்? என்று சென்னை மாநகராட்சிக்கு மட்டுமே தெரியும் என்று தற்காலிக பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கொரோனா பணியில் இருக்கும் 16 ஆயிரம் தற்காலிக ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார்
சென்னை மாநகராட்சி அலுவலகம்
  • Share this:
சென்னை மாநகராட்சியால் தற்காலிகமாக பணியாற்றி வரும் 16,000 சிறப்பு ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.

சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு வீடுகளிலும் நேரடியாக ஊழியர்கள் சென்று உடல் நிலை குறித்து விசாரிப்பதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் 16 ஆயிரம் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து பணியாற்றக்கூடிய அவர்கள்  மாதம் இறுதியில் சம்பளம் தருவதாக கூறி இருந்தனர். ஆனால் தற்பொழுது வரை சம்பளம் வழங்கப்படவில்லை இதில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் வேலை செய்யக்கூடிய நபர்களுக்கு, வேலை இல்லாத காரணத்தால் தாங்கள் வேலைக்கு சென்று சம்பளம் பெறுவதற்கு இதுபோன்ற ஆபத்தான வேலைகளை செய்து வருகின்றனர்.


ஆனால், அவர்கள் செய்யும் பணிக்கான ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மண்டல அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்களின் வங்கிக்கணக்கில் ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என்றும் தங்களுக்கு அதுகுறித்து தெரியாது என்றும் கூறினர்.

நாளை சம்பளம் வழங்கப்படும் என தினசரி சொல்கின்றனர்; எப்பொழுது சம்பளம் வழங்கப்படும்? என்று சென்னை மாநகராட்சிக்கு மட்டுமே தெரியும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Also see...Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading