கொரோனாவுக்கு புதிய மருந்து? பாதிக்கப்பட்ட பெண்ணைக் குணமாக்கிய தாய்லாந்து மருத்துவர்கள்!

கொரோனாவுக்கு புதிய மருந்து? பாதிக்கப்பட்ட பெண்ணைக் குணமாக்கிய தாய்லாந்து மருத்துவர்கள்!
கோப்புப்படம்
  • Share this:
தாய்லாந்து நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எச்.ஐ.வி மற்றும் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளைக் கலந்துகொடுத்ததில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. சீனாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 12,000 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கேரளா மாநிலத்தில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தாய்லாந்து நாட்டில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு அந்நாட்டில் மருத்துவர் அளித்த மருந்தால் அவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 71 வயது பெண்ணுக்கு எச்.ஐ.வி மற்றும் காய்ச்சலுக்கான எதிர்ப்பு மருந்துகளைக் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது.


காய்ச்சலுக்கான லோபிநாவிர் கலந்த ஓசால்டாமிவிர் மற்றும் ரிடோநாவிர் மற்றும் எச்.ஐ.விக்கான எதிர்ப்பு மருந்துகளான கிரிங்சக் கலந்துகொடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு, அந்தப் பெண்ணிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் கொரோனா நெகடிவ் இருந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also see:
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading