கொரோனா விதிமீறல், மாஸ்க் அணியாததால் தாய்லாந்து பிரதமருக்கு ரூ.14,270  அபராதம்

தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்.| கோப்புப்படம்.

தாய்லாந்தில், பொது இடத்தில் கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட பிரதமர் பிரயுத் சான்- ஓச்சாவுக்கு 6000 பக்த் அதாவது ரூ. 14,270  அபராதம் விதிக்கப்பட்டது.

 • Share this:
  ஆசிய நாடான தாய்லாந்தில் கொரோனா பரவலை தடுக்க, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள், கடுமையாக்கப்பட்டு உள்ளன. விதிகளை மீறுவோருக்கு, அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

  இதற்கிடையே நேற்று முன்தினம், தலைநகர் பாங்காக்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் பிரயுத் சான்- ஓச்சா, முக கவசம் அணியவில்லை.விதிமீறலில் ஈடுபட்ட பிரதமருக்கு, பாங்காக் மாகாண கவர்னர் அஸ்வின் குவான் முவாங், நேற்று 190 டாலர்கள் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

  இதுகுறித்து, தன் அதிகாரப்பூர்வ, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ள கவர்னர் அஸ்வின், பிரதமர் முக கவசம் அணியாத புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். பின், அந்த புகைப்படம் அகற்றப்பட்டது.

  சிட்டி ஹாலில் பிரதமர் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து விசாரித்திருக்கிறார், அதில் வீட்டை விட்டு வெளியே வந்தா முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது தெரிந்திருந்தும் பிரதமர் முகக்கவசம் அணியாமல் வந்தார், இதனால் பிரதமராக இருந்தாலும் குற்றம் குற்றமே, அதனால் அபராதம் விதிக்கப்பட்டது என்கிறார் கவர்னர் அஸ்வின் குவான்முவாங்.

  மே 1 முதல் இந்தியாவிலிருந்து சுற்றுலாப்பயணிகளுக்கு தாய்லாந்து தடை விதித்துள்ளது, தாய்லாந்து குடிமக்கள் மட்டும் வெளிநாடுகளிலிருந்து உள்ளே வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
  தாய்லாந்திலும் கோவிட் 19 பரவி வருகிறது. அங்கும் தினசரி 2000 புதிய தொற்றுக்கள் ஏற்படுகின்றன. திங்களன்று 2048 புதிய கொரோன தொற்றுக்களும் 8 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.

  இந்நிலையில் திங்கள் முதல் பேங்காக்கில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியவில்லை எனில் மக்களுக்கு ரூ.47,620 அபராதம் விதிக்கப்படுகிறது.
  இந்நிலையில் நாட்டின் பிரதமரே விதிமீறலில் ஈடுபட்டதாக சமூக ஊடகங்களில் அந்நாட்டு குடிமக்கள் கடும் விமர்சனங்களில் இறங்கினர், முகக்கவசம் அணியாத பிரதமரின் புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டனர். இதனையடுத்தே கவர்னர் அதிரடி அபராதம் விதித்துள்ளார்.

  தாய்லாந்தில் மொத்தம் 57,508 கோவிட் தொற்றுக்கள் உள்ளன, இதுவரை 148 பேர் மரணமடைந்துள்ளனர்.
  Published by:Muthukumar
  First published: