அன்று வானமே எல்லை... இன்று உணவு டெலிவரி பாய்...! ஒரு விமானியின் சோக பயணம்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக விமானி ஒருவர் உணவு டெலிவரி செய்யும் வேலைக்கு மாறியுள்ளார்.

அன்று வானமே எல்லை... இன்று உணவு டெலிவரி பாய்...! ஒரு விமானியின் சோக பயணம்
பைலட் நகரின் இன்டா
  • Share this:
கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் பலர் தங்களது வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்துள்ளதால் பலர் பிழைப்புக்காக வேறு தொழிலுக்கு மாறி உள்ளனர்.

விமான ஊழியர்கள் மட்டுமல்லாமல் விமானிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தாய்லாந்து நாட்டை சேர்ந்த உதவி விமானி நகரின் இன்டா தற்போது உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். 4 ஆண்டுகளாக விமானியாக இருந்த இவர் தற்போது உணவு டெலிவரி தொழிலுக்கு மாறி உள்ளார்.

படிக்க: சுஷாந்த் சிங் பிரிவால் தவித்து வாடும் செல்லப்பிராணி

படிக்க: ராணுவ ஜெனரல் தலைமையில் பேச்சுவார்த்தை: சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் துன்புறுத்தப்படாமல் விடுவிப்பு..


விமானி நகரின் இன்டா சி.என்.என் செய்திக்கு அளித்த பேட்டியில், “விமான ஊழியர்கள் பலர் ஊதியம் இல்லாமல் விடுப்பில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோனார் குறைந்த ஊதியத்தை எதிர்கொள்கின்றனர். நான் இந்த வேலைக்கு செல்வதன் மூலம் குடும்ப செலவை சற்று சாமளிக்க முடிகிறது. என் நண்பர்கள் பலரும் இதுப்போன்று வேலைக்கு செல்கின்றனர்.

ஊழியர்கள் யாரும் வேலையில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால் குறைந்த சம்பளத்தை எதிர்கொள்வது கஷ்டமான சூழலாக உள்ளது. நான் முதன்முறையாக ஒரு வாடிக்கையாளர்க்கு உணவு டெலிவரி செய்யும் போது அந்த உணர்வு நன்றாக தான் இருந்தது. என்னால் எதையும் செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன்.

நான் எனது சகப்பணியாளர்கள், என்னுடைய கேப்டன், எனது குழுவில் வேலைசெய்பவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களையும் இழந்துள்ளேன். எல்லாவற்றிக்கும் மேலாக வானமே எல்லையாக இருந்த எனது பணியை நான் பெரிது இழந்து தவிக்கிறேன்“ என்றார்.
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading