தென்காசியில் சமூக இடைவெளியை மறந்து காய்கறி வாங்கும் மக்கள்: தொற்றுநோய் பரவும் அபாயம்!

தென்காசி பழைய பஸ் நிலையத்தில் இயங்கும் காய்கறி சந்தையில், பொதுமக்கள் சில தினங்கள் மட்டுமே சமூக விலகலை கடைபிடித்து வந்தநிலையில் தற்போது கூட்டமாக நின்று வாங்கிச் செல்கின்றனர்.

தென்காசியில் சமூக இடைவெளியை மறந்து காய்கறி வாங்கும் மக்கள்: தொற்றுநோய் பரவும் அபாயம்!
சமூக இடைவெளியை மறந்து காய்கறி வாங்கும் மக்கள்
  • Share this:
தென்காசி மாவட்டத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட காய்கறி சந்தைகளில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் காய்கறிகளை வாங்கிச்செல்வதால் தென்காசி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் தற்காலிகமாக பேருந்து நிலையங்கள், மைதானங்களில் காய்கறி சந்தை மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே செயல்படுத்த அனுமதி உள்ளது.

சமூக இடைவெளியை மறந்து காய்கறி வாங்கும் மக்கள்இந்நிலையில் தென்காசியில் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையங்களில் காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய பஸ் நிலையத்தில் இறைச்சி கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இங்கு தினமும் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.இதனிடையே தென்காசி பழைய பஸ் நிலையத்தில் இயங்கும் காய்கறி சந்தையில், பொதுமக்கள் சில தினங்கள் மட்டுமே சமூக விலகலை கடைபிடித்து வந்தநிலையில் தற்போது கூட்டமாக நின்று வாங்கிச் செல்கின்றனர்.மக்கள் அரசு உத்தரவை கண்டுகொள்ளாமல் மீறி செயல்படுவதால், நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்காசி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலீசார் சார்பில் போடப்பட்ட குறியீடுகளை மீண்டும் போட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: April 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading