ஏழு மாதங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு கொரோனா ரிசல்ட்... டெஸ்ட் எடுக்காத பெண்ணுக்கு பாசிட்டிவ் - அதிர்ச்சி சம்பவம்

Youtube Video

ஏழு மாதங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு கொரோனா நெகட்டிவ் எனவும், பரிசோதனை செய்து கொள்ளாத பெண்ணுக்கு கொரோனா பாசிட்டிவ் எனவும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
    தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த வினோத், குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு, தென்காசி கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து 19ம் தேதி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவரது தந்தை அந்தோணிராஜ்க்கு கொரோனா நெகட்டிவ் என்றும், மனைவி ஜென்சிக்கு கொரோனா பாசிட்டிவ் என்றும் கூறப்பட்டிருந்தது.

    சற்று நேரத்தில் தென்காசி கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அழைத்த ஊழியர், இதே தகவலை கூறியதோடு, ஜென்சியை மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வினோத், தன்னுடைய தந்தை அந்தோணிராஜ் 7 மாதங்களுக்கு முன்பே உயிரிழந்து விட்டதாகவும், தன்னுடைய மனைவி தென்காசியில் எந்த பரிசோதனையும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர், இணைப்பைத் துண்டித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து வினோத்தை அழைத்தவர்கள், ஜென்சியை மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறியுள்ளனர். இதுதொடர்பாக நமது செய்தியாளர் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ஜெஸ்லினை தொடர்பு கொண்டார். அப்போது, கொரோனா பரிசோதனைக்கு எங்கிருந்து மாதிரி சேகரித்து கொடுக்கப்பட்டதோ, அந்த இடத்திற்கு மட்டுமே தாங்கள் முடிவுகளை அனுப்புவதாகவும், மாதிரி கொடுத்தவர்களை நேரடியாக தொடர்பு கொள்வதில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் கேட்டபோது, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்
    Published by:Vijay R
    First published: