தென்காசியில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று

தென்காசி மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 525- ஆக அதிகரித்துள்ளது.

தென்காசியில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று
மாதிரிப் படம்
  • Share this:
தென்காசியில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 525- ஆக அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே  சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சீரங்கன் தெருவில், 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரா சென்று திரும்பிய வெள்ளிப் பட்டறை உரிமையாளரால், இந்த பகுதியில் கொரோனா பரவியுள்ளது. அவர், மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்காமல் வீட்டில் இருந்துள்ளார். எனவே அவர் மீது நோய்தொற்று பரப்பியதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் இன்று புதிதாக 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,834- ஆக அதிகரித்துள்ளது. காஞ்சியில் இதுவரை 36 பேர் உயிரிழந்த நிலையில், 1, 766 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,032 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading