கொரோனாவால் 24,000-க்கும் மேற்பட்டோர் பலி...? சீன இணையத்தால் குழப்பம்

Corona Virus | China

கொரோனாவால் 24,000-க்கும் மேற்பட்டோர் பலி...? சீன இணையத்தால் குழப்பம்
கொரோனா
  • Share this:
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 24,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்நாட்டு இணையதளம் வெளியிட்ட தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் தொடர் உயிர்ப்பலி நிகழ்ந்து வருகிறது. முதலில் உயிரிழப்பின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருந்து வந்தது. ஆனால் போகப் போக உயிரிழப்பின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 630 என சீன அரசு அறிவித்துள்ளது.

ஆனால், சீனாவின் இரண்டாவது மிகப் பெரிய இணையதளமான "டென்சென்ட்" வெளியிட்ட கரோனா வைரஸ் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றால் 24,589 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,54,000 என்றும் அதிர்ச்சி தகவலை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அது சீன அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை விட பல மடங்கு அதிகமாக இருந்தது.


அதைப் பார்த்ததும் இணையவாசிகள் அதிர்ந்தனர். என்ன நடந்ததோ தெரியவில்லை...திடீரென அந்த தகவலை நீக்கிவிட்டு, சீன அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ உயிரிழப்புகளின் எண்ணிக்கையையே டென்சென்ட் மீண்டும் பதிவிட்டது. ஆனால் அதற்குள் இணையவாசிகள் பலர் அந்த எண்ணிக்கை இருந்த படத்தை ஷேர் செய்தனர்.சீன அரசு நோய்த்தொற்று பற்றிய உண்மையான தகவலை மறைத்துவிட்டதாக இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பாவில் உள்ள தன் ஆலையை தற்காலிகமாக மூட பரிசீலித்து வருவதாக பியட் கிறிஸ்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஊஹானில் இருந்து அழைத்து வரப்பட்ட 600-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.Also see...கொரோனாவின் மறுபுறம் உலகம்... மனதை உலுக்கும் புகைப்படங்கள்...!
First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading