சென்னையில் ஒரு மாதத்தில் பத்து மடங்கு இறப்பு அதிகரிக்கும்: எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக ஆய்வில் கணிப்பு

சென்னையில் இன்னும் ஒரு மாதத்தில் இறப்புகள் பத்து மடங்கு அதிகரிக்கும் என எம்.ஜி.ஆர்.பல்கலைகழக ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு மாதத்தில் பத்து மடங்கு இறப்பு அதிகரிக்கும்: எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக ஆய்வில் கணிப்பு
கோப்புப்படம்
  • Share this:
சென்னையில் ஜூலை 15-ஆம் தேதி 1,05,244 பாதிப்புகளும் 1654 இறப்புகளும் ஏற்படக்கூடும் என எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இது வரை ஏற்பட்ட பாதிப்புகள் , அந்த ஆய்வில் கணிக்கப்பட்டதைப் போலவே உயர்ந்துள்ளன.

இந்த ஆய்வில் சென்னையில் மே 25-ஆம் தேதி  11119 பாதிப்புகளும் 83 இறப்புகள் ஏற்படும் என கணிக்கபப்ட்டது. அன்று 11131 பாதிப்புகளும் 83 இறப்புகளும் பதிவாகின. மே 30ஆம் தேதி 14415 பாதிப்புகளும் 119 இறப்புகளும் நேரிடும் என கணிக்கப்பட்டது. அந்த தேதில் சென்னையில் 13980 பாதிப்புகள் மற்றும் 119 இறப்புகள் ஏற்பட்டன.

அதே கணிப்பின் படி, ஜூன் 1ஆம் தேதி 15991 பாதிப்புகள் மற்றும் 137 இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டது. அன்று 15770 பாதிப்புகளும் 138 இறப்புகளும் ஏற்பட்டன.


அதேபோன்று ஜூன் 2ஆம் தேதி 16842 பாதிப்புகள் ஏற்படும் என்றும் 146 இறப்புகள் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டது. அன்று சென்னையில் 16585 பாதிப்புகள் மற்றும் 150 இறப்புகள் ஏற்பட்டன.

ஜூன் 3-ஆம் தேதி 17738 பாதிப்புகள் மற்றும் 156 இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டது. அந்த தேதியில் 17598 பாதிப்புகள் மற்றும் 153 இறப்புகள் ஏற்பட்டன. ஜூன் 4ஆம் தேதியில் சென்னையில் 18681 பாதிப்புகள் மற்றும் 166 இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டது. அந்த தேதியில் சென்னையில் 18693 பாதிப்புகள் மற்றும் 167 இறப்புகள் ஏற்பட்டன.

தமிழகத்தில் 27256 பாதிப்புகள் மற்றும் 220 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜூன் 5ஆம் தேதியான இன்று மேலும் ஆயிரம் பாதிப்புகள் அதிகரித்து 19674 என்றும் இறப்புகள் 177 என்றும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த பத்து நாட்களில் ஜூன் 15-ஆம் தேதி பாதிப்புகள் 32977 மற்றும் 324 இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.ஜூன் 30-ஆம் தேதியில் இது இரு மடங்காகி 7,1024 பாதிப்புகள் மற்ற 748 இறப்புகள் சென்னையில் நேரிடலாம். இதே தேதியில் தமிழகத்தில் 1,32,242 பாதிப்புகளும் 769  இறப்புகளும் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி சென்னையில் 74714 பாதிப்புகள் மற்றும் 790 இறப்புகள் ஏற்படக்கூடும். ஜூலை 15-ல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து  150244 என பாதிப்புகளும் 1654 என இறப்புகளும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செப்டம்பர் மாத இறுதியில்தான் பாதிப்புகளும் இறப்புகளும் உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தான் பாதிப்புகள் குறையும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் அனைத்தும் சென்னையில் வழங்கப்படவில்லை. நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுப் போக்குவரத்து இயக்கப்படவில்லை.

மேலும் இது குறித்து எம்.ஜி.ஆர்.பல்கலைகழக ஆராய்ச்சியாளர் சீனிவாசன் கூறுகையில், “தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் சென்னையில் அப்படியே நீடிக்கும் பட்சத்தில் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும் என கணித்துள்ளோம். செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையின் உச்ச பாதிப்பு ஏற்படும். அப்போது ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன.

எனவே மக்கள் தனி மனித சுகாதாரத்தை கடைப்பிடிப்பது மிக அவசியம். ஊரடங்கு கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் சென்னையில் இந்நேரம் கூடுதலாக 1.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1200 பேர் இறந்திருப்பார்கள்" என்று கூறுகிறார்.

மேலும் படிக்க...

குறிப்பிட்ட சில மாநிலங்களில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஷாக் தகவல்கள்

 
First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading