திருச்சியில் கொரோனாவால் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைப்பு... காந்தி மார்க்கெட்டை மூட வியாபாரிகள் எதிர்ப்பு...

Youtube Video

திருச்சியில் கொரோனா பரவல் காரணமாக ரயில்வே மைதானத்தில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்படுகின்றன.

  • Share this:
திருச்சி காந்தி சந்தையில் மொத்த, சில்லறை காய்கறி, மளிகை என 3,000 கடைகள் உள்ளன. இந்த கடைகள் கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டு மொத்த விற்பனை சந்தை ஜீ கார்னரிலும் 10 இடங்களில் சில்லறை விற்பனை சந்தைகளும் செயல்பட்டன. இதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி காந்தி சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் காந்தி சந்தை வியாபாரிகள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு, கடைகள் மூடப்பட்டன. மீண்டும் கொரோனா வேகமாக பரவும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக காந்தி சந்தையை தற்காலிகமாக மூடவும்
சில்லரை விற்பனை சந்தைகளை மீண்டும் திறக்கவும் திட்டமிடப்பட்டது.

சந்தை இடமாற்றத்திற்கு வியாபாரிகளின் ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து, காந்தி சந்தையை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் கூறினர்.  இதையடுத்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாக சங்கத்தினர் வியாபாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பெரும்பான்மையான வியாபாரிகள் இட மாற்றத்தை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் காந்தி சந்தையில் உள்ள காய்கறிக் கடைகள் மீண்டும் ஜீ கார்னர் ரயில்வே மைதானத்தில் செயல்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். மின் விளக்கு அமைத்து, கடைகளுக்கான இடங்களை அளந்து குறியிட்டுள்ளனர். மொத்த விற்பனை கடைகள் சுமார் 200, சில்லறை விற்பனை கடைகள் சுமார் 800 என 1,000 கடைகள் இன்று இரவு முதல் செயல்படயுள்ளன.

மேலும் படிக்க...  மதுரை, திருச்சியில் மக்களை மகிழ்வித்த கோடை மழை...

இதில் குடிநீர், கழிவறை வசதிகளை செய்திருந்தாலும் போதுமானதாக இல்லை என்றும் கூடுதல் கழிவறைகளை அமைத்து, குடிநீர் தொட்டிகளை தொடர்ந்து சுத்தப்படுத்தி தர வேண்டுமென்றும்  வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: