சடலத்தை எடுக்க தயங்கிய ஊழியர்கள் - களமிறங்கிய மருத்துவர்

Corona |

சடலத்தை எடுக்க தயங்கிய ஊழியர்கள் - களமிறங்கிய மருத்துவர்
டிராக்டர் ஓட்டிய டாக்டர்
  • News18
  • Last Updated: July 13, 2020, 9:11 PM IST
  • Share this:
தெலங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை எடுத்துச்செல்ல மாநகராட்சி ஓட்டுநர்கள் யாரும் முன்வராத நிலையில், மருத்துவர் ஒருவரே டிராக்டரில் உடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்தார்.

பெத்தபள்ளியின் டெங்குவாடா என்ற இடத்தில் நீரிழிவு நோயாளி ஒருவருக்கு கடந்த 10 ம்தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் உடல்நலம் மோசமானதால் ஞாயிறன்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

படிக்க: இன்று அறிமுகமாக இருக்கும் Google-இன் ”சம்திங் ஸ்பெஷல்” என்ன?


படிக்க: ஆறு ஒன்றில் இரு வண்ணங்களில் நீர் ஓடும் ஆச்சர்யம் - வீடியோ


மருத்துவமனையில் இருந்து உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி டிராக்டரை இயக்க ஓட்டுநர்கள் யாரும் முன்வரவில்லை. உடனே தாமதிக்காமல் அங்கிருந்த மருத்துவர் ஸ்ரீராம் டிராக்டரை ஓட்டிச்சென்று உடலை அடக்கம் செய்ய உதவினார். தயங்காமல் உடனே செயல்பட்ட மருத்துவர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading