நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது, அயராத முயற்சியும், ஒற்றுமையும்தான் காரணம் - உலக சுகாதார அமைப்பு பாராட்டு

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதைக் குறிப்பிட்டு உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது, அயராத முயற்சியும், ஒற்றுமையும்தான் காரணம் - உலக சுகாதார அமைப்பு பாராட்டு
தாராவி பொதுக்கழிப்பிடப் பகுதி
  • Share this:
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதைக் குறிப்பிட்டு உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நெருக்கம் நிறைந்த, 6.5 லட்சம் மக்கள் வசிக்கும் மக்கள் நெருக்கம் நிறைந்த தாராவியில் கொரோனா பரவல் பெரும் கவலையை உண்டாக்கியது. தாராவியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தியதன் மூலமாக தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தாராவியில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவோர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நேற்று, 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் இது குறித்து கூறுகையில், “ கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் தாராவி ஆகிய இடங்கள் நமக்கு காட்டியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
”கடந்த ஆறு வாரங்களாக, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று இரு மடங்குக்கும் அதிகமாக உள்ளது. வைரஸ் தொற்று எவ்வளவு வேகமாக பரவினாலும், தீவிர நடவடிக்கைகள் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்ற எடுத்துக்காட்டுகளும் நமக்கு கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமை மூலமாகவும், உலக நாடுகளின் ஆதரவின் மூலமாகவும், அயராத முயற்சியின் மூலமாகவும் மட்டுமே இத்தொற்றை அழிக்கமுடியும் என்று கூறியுள்ளார்.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading