மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் பணியைத் தொடரும் ஆசிரியர்கள்!

மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் பணியைத் தொடரும் ஆசிரியர்கள்!
மாணவர்கள் இன்று வகுப்பறையில் ஆசிரியர்கள் மட்டும் இருக்கும் காட்சி
  • Share this:
கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இருப்பினும் மதுரை மாவட்டத்தில் ஆசிரியர்கள் அனைவரும் வழக்கம்போல பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். வெறிச்சோடி இருந்த பள்ளியில் மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் ஆசிரியர்கள் மட்டும் தனிமையில் அமர்ந்து தங்கள் பணியை கவனித்தனர்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதை பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். வெறிச்சோடி இருக்கும் வகுப்புகளை பார்க்கும் போது தங்களுக்கு கவலையாக இருப்பதாகவும் இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி அரசின் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டது தெரியாமல் சில மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருவதாகவும் அவர்களிடம் விடுமுறை அறிவிப்பு குறித்து விளக்கி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading