ஊழியர்களின் நிலை என்ன? டி.சி.எஸ் நிறுவனம் விளக்கம்

” கல்லூரிகளில் நேர்காணலில் தேர்வான 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் கட்டாயம் சேர்த்து கொள்ளப்படுவார்கள்”

ஊழியர்களின் நிலை என்ன? டி.சி.எஸ் நிறுவனம் விளக்கம்
டி.சி.எஸ்
  • Share this:
கொரோனா வைரஸால் ஐடி நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது ஊழியர்கள் நிலை குறித்து டி.சி.எஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்த நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் 50 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டி.சி.எஸ் நிறுவனம் 2019-20 ஆண்டுக்கான 4வது காலாண்டில் 8049 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இது தொடர்பாக மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டி.சி.எஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் பேசுகையில், “கடந்த நிதியாண்டில் லாபம் ஈட்டிய போதும் கொரோனா பரவல் காரணமாக நடப்பு நிதியாண்டு மிகவும் கடினமாக உள்ளது.


இதன் காரணமாக ஊழியர்கள் யாரையும் வேலையில் இருந்து நீக்கப்போவதில்லை. அதே வேளை சம்பள உயர்வு வழங்கப்படமாட்டது என்ற அவர், கல்லூரிகளில் நேர்காணலில் தேர்வான 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் கட்டாயம் சேர்த்து கொள்ளப்படுவார்கள்“ என்றார்.

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டி.சி.எஸ்-ல் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

First published: April 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading