கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் அதிகரிக்கும் தொற்று - ஒரு வாரத்தில் இவ்வளவா?

Corona | கடந்த மாத தொடக்கத்தில் வெறும் 9 பேர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி நோய் கட்டுக்குள் இருந்த நீலகிரி மாவட்டத்தில் தற்போது 84 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்

கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் அதிகரிக்கும் தொற்று - ஒரு வாரத்தில் இவ்வளவா?
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: June 30, 2020, 12:42 PM IST
  • Share this:
தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 898 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இரண்டாவது அலை போன்று புதிய பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இதற்கு சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள், மாவட்டங்களில் குறைவான பரிசோதனைகள் ஆகியவை காரணமாக கூறப்படுகின்றன. இந்நேரத்தில் மதுரை திண்டுக்கல் ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் நம் கவனத்தை பெற்று வந்தாலும் மேற்கு மாவட்டங்களில் இந்த பாதிப்பு மெல்ல மெல்ல தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருக்கின்றன.

கோவை, தரும்புரி, சேலம், திருப்பூர், நாம்க்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய எட்டு மேற்கு மாவட்டங்களில் நாமக்கல், திருப்பூர் தவிர மற்ற ஆறு மாவட்டங்களில் பாதிப்பு கிட்டத்தட்ட இரடிப்பாகி உள்ளது.


கோவையில் கடந்த 22ம் தேதி 280 பாதிப்புகள் கண்டறியப்பட்டிருந்தன. தற்போது 528 பாதிப்புகள் உள்ளன. இதில் மூன்று பேர் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இதில் 339 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேற்கு மாவட்டங்களில் சேலத்தில் தான் அதிக பாதிப்பு உள்ளது. சேலத்தில் தற்போது 753 பாதிப்புகள் கண்டறியப்ப்ட்டுள்ளன. கடந்த வாரம் 352 பாதிப்புகள் மட்டுமே இருந்தன. கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட பாதிப்பில் 98 பேர் வெளி மாநிலம் மற்றும் நாடுகளிலிருந்து வந்தவர்கள்.


படிக்க: ’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக்

படிக்க: விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?









தரும்புரியில் 37 ஆக் இருந்த பாதிப்பு ஒரு வாரத்தில் 70 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏழு பேர் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள்.  கிருஷ்ணகிரியில் தற்போது 134 புதிய பாதிப்புகள் உள்ளன். இதில் 93 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளன. இந்த மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு முன் மொத்த பாதிப்பே 72 ஆக இருந்தது.

கடந்த மாத தொடக்கத்தில் வெறும் 9 பேர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி நோய் கட்டுக்குள் இருந்த நீலகிரி மாவட்டத்தில் தற்போது 84 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 170% பாதிப்பு அதிகரித்துள்ளது. 22-ம் தேதி 31 பேர் பாதிக்கப்பட்டிருந்த மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 54 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இதில் இரண்டு பேர் வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்கள்.

நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்திருக்கும் வேகம் சற்று குறைவாக உள்ளது. நாமக்கல்லில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக ஐந்து பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது,94 மொத்தமாக அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போன்று திருப்பூரில் 122 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 160 ஆக உயர்ந்துள்ளது. அந்த மாவட்டத்தில் தற்போது 43 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading