தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 79 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் சென்னையில் 36 பேர் உட்பட இன்று புதிய உச்சமாக 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 79 பேர் உயிரிழப்பு
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 17, 2020, 8:05 PM IST
  • Share this:
தமிழகத்தில் இதுவரை 1,60,907 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 1,10,807 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 47,782 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 56, தனியார் மருத்துவமனையில் 23 பேர் இறந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 28 பேர் 60 வயதுக்கு குறைவானவர்கள் ஆவர்.

இன்று மொத்தம் 16 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதை தவிர்த்து, செங்கல்பட்டு- 8, கோவை- 5, திருவள்ளூர்- 5, ராமநாதபுரம் – 4, மதுரை-4, திருவண்ணாமலை – 4, திருச்சி-3, வேலூர்-3, விழுப்புரம் – 1, காஞ்சிபுரம் – 1, ராணிப்பேட்டை-1, சிவகங்கை – 1, தேனி- 1, திருப்பத்தூர் – 1, தூத்துக்குடி-1 என சென்னை தவிர்த்து வெளிமாவட்டங்களில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், தென் மாவட்டங்களில் 11 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
படிக்க: கொரோனா தொற்று உள்ளதா என 15 நிமிடங்களில் கண்டறியும் ஆன்டிபாடி சோதனை - பொதுமக்களுக்கு எப்போது?படிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் உயிரிழப்பு என்பது அதிகரிக்கத்தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading