Home /News /coronavirus-latest-news /

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் தேதியில் மாற்றம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் தேதியில் மாற்றம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஜுன் 1-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் ஜுன் 1-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

    கொரோனாவால் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், ஜுன் 1-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    போக்குவரத்து, மாணவர்கள் பாதுகாப்பு என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தேர்வு தேதி மாற்றப்படலாம் என்று தகவல்கள் கசிந்தன. அதற்கேற்ப இன்று புதிய தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

    ஜுன் 1-ம் தேதி தொடங்க இருந்த முதல் தேர்வு, 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களுக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

    புதிய தேர்வு அட்டவணை


    மேலும், 11-ம் வகுப்பில் ஒத்திவைக்கப்பட்ட பாடம், மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுதேர்வு பாடத்திற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    11-ம் வகுப்பு தேர்வு அட்டவணை


    11-ம் வகுப்பு வேதியல், கணக்குப்பதிவியல், புவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் 16-ம் தேதி காலை நடக்க உள்ளது.

    12-ம் வகுப்பு


    12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மறுதேர்வு 18-ம் தேதி காலை நடக்க உள்ளது.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankar
    First published:

    Tags: Public exams

    அடுத்த செய்தி