பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆன்லைன் வழிக்கல்விக்கு புதிய இணையதளம் அறிமுகம்

மாதிரி படம்

மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

  • Share this:
தமிழக அரசு அறிமுகபடுத்திய e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் ஒவ்வொரு பாடத்திற்கும், பாடத்தில் உள்ள தலைப்பு வாரியாக 3 முதல் 4 நிமிடம் வரையில் குறுகிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ன.

மேலும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கில வழியில் அந்தந்த பிரிவுகளுக்கேற்ப பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வழி முறையினை ஒழுங்குபடுத்த கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க...

முழு ஊரடங்கு அமலாகுமா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

மேலும் ஆன்லைன் வழிக் கல்வியைத் தவிர தற்போதைய சூழலில் வேறு வழியில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதையும் அமைச்சர்  சுட்டிக்காட்டியிருந்தார். இதன் மூலம் ஆன்லைன் வழிக் கல்வி முறைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கியத்துவம் அளிக்கும் என்று கருதப்படுகின்றது.
Published by:Vaijayanthi S
First published: