தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 80 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 80 பேர் உயிரிழப்பு

மாதிரிப்படம்

தமிழகத்தில் புதிதாக 14842 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் திங்கள்கிழமை (26.04.21) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரேநாளில் 14842 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,”தமிழகத்தில் புதிதாக 14842 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாகாக 4086 பேருக்கும் செங்கல்பட்டில் 1163 பேருக்கும் கோவையில் 1004 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,66,329 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 1,00,668பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 31,506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 9142 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 9,52,186பேர் கொரோனாவிலிருந்து விடுப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த கொரோனா உயிரிழப்பு 13,475 ஆக அதிகரித்துள்ளது.
    Published by:Ramprasath H
    First published: