முகப்பு /செய்தி /கொரோனா / தமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு!

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

அதிகபட்சமாக சென்னையில் இன்று 6,150 பேருக்கும், அடுத்ததாக கோயம்புத்தூரில் 3,264 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 335 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது. தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் காலை 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,49,449 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 33,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 16,31,291-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 20,486 வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 13,81,690 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 335 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 18,005-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 6,150 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,264 பேருக்கும், செங்கல்பட்டில் 2,154 பேருக்கும், திருவள்ளுரில் 1,829 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,241 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,069 பேருக்கும், திருச்சியில் 1,544 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Corona, CoronaVirus, COVID-19 Second Wave