விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?

LockDown | நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் திரையரங்குகள், மால்கள், ஜிம்கள் திறக்க தடை தொடர்கிறது

விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?
கோப்புப்படம் (PTI)
  • News18
  • Last Updated: June 30, 2020, 6:39 AM IST
  • Share this:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30-ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், ‘தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தொடரும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி மாவட்டங்களில் தற்போது அமலிலுள்ள முழு ஊரடங்கு பலனளித்துள்ளதால், அதேபோன்ற முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5-ம் தேதி வரை தொடரும். ஜூலை 6-ம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் 19-ம் தேதிக்கு முன்னர் அமலிலிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





படிக்க: ’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக்

படிக்க: தந்தை, மகன் உயிரிழப்பில் காவல்துறை பதிவுசெய்த எப்.ஐ.ஆர் போலியானதா? அம்பலப்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்






எனினும், கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு தடை தொடர்கிறது.

  • நகர்ப்புர வழிபாட்டுத்தலங்களிலும், பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு. அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

  • நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

  • தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற
    விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும்
    தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

  • வணிக வளாகங்கள்

  • பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.

  • மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

  • மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.

  • திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள்,
    அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

  • அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

  • மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.


மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகள்:

திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது மற்றும் இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading