இன்றைய கொரோனா பாதிப்பு - அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த மாவட்டங்களில் திடீர் அதிகரிப்பு

Corona | தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா தொற்று 4 ஆயிரத்தைக் கடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கொரோனா பாதிப்பு - அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த மாவட்டங்களில் திடீர் அதிகரிப்பு
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 16, 2020, 7:33 PM IST
  • Share this:
சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவாக இன்று 5,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா தொற்று 4 ஆயிரத்தைக் கடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


மாவட்ட வாரியாக பார்க்கும் போது, சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று மிக வேகமாக அதிகரிக்கவில்லை. அந்த நிலையே இன்றும் நீடிக்கிறது. இன்று சென்னையில் 1157 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதிர்ச்சி தரும் வகையில் திருவள்ளூரில் இன்று 526 பேருக்கு தொற்று கன்டறியப்பட்டுள்ளது. வேலூரில், 253 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு எண்ணிக்கை
மதுரை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று 200-க்கு அதிகமாக தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. விருதுநகர், விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, ராணிபேட், கன்னியாகுமரி, திண்டுக்கல், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமான பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




படிக்க: ₹ 264 கோடி செலவில் கட்டி திறக்கப்பட்ட பாலம் - ஒரே மாதத்தில் உடைந்ததால் அதிர்ச்சி

படிக்க: இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு டிக்டாக்கைத் தடை செய்யவேண்டும் - அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்








சென்னையில் இன்று அதிகபட்சமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading