Home /News /coronavirus-latest-news /

வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பவர்களுக்கு சிகிச்சை நடைமுறைகள் இதுதான்

வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பவர்களுக்கு சிகிச்சை நடைமுறைகள் இதுதான்

கோப்புப் படம்

கோப்புப் படம்

7 நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு அறிகுறி இல்லாத பட்சத்தில், அவர்கள் வீட்டிற்குச் சென்று மீதமுள்ள நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.

நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவதற்கான சிறப்பு ரயில், விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் பொது மக்களுக்கு தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல்கள்:

1. தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கு பயணிப்பவர்கள்

  • கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்களுக்கு கோவிட்-19  பரிசோதனை செய்யப்படும்.

  • நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் அனைவரும் 14 நாட்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.


2. பிற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள்

  • அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கோவிட்-19 பரிசோதனை செய்யப்படும்.

  • கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர்.

  • கொரோனா தொற்று இல்லாதவர்கள், முக்கியமாக மும்பை, குஜராத், மகாராஷ்டிரா போன்ற தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அரசு கண்காணிப்பில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.

  • 7 நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு அறிகுறி இல்லாத பட்சத்தில், அவர்கள் வீட்டிற்குச் சென்று மீதமுள்ள நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.

  • அதிகம் பாதிப்பில்லாத மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லையென்றால், வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.


3. பிற நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள்:

  • பிற நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் அனைவரும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு கோவிட் 19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

  • நோய்த் தொற்று உறுதியானால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

  • கொரோனா தொற்று இல்லையென்றால் அரசு கண்காணிப்பில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.

  • 7 நாட்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக பரிசோதனை செய்யப்படும்.

  • நோய்த் தொற்று இல்லையென்றால் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.







சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: CoronaVirus, Lockdown

அடுத்த செய்தி