முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!

frontline workers-மருத்துவ, சுகாதாரத்துறை பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக செயலாற்றி கொரோனா பரவலை கட்டுக்கு வைக்க போராடி வருகின்றனர். கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தங்கள் இன்னுயிரை பணையம் வைத்து பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. 

frontline workers-மருத்துவ, சுகாதாரத்துறை பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக செயலாற்றி கொரோனா பரவலை கட்டுக்கு வைக்க போராடி வருகின்றனர். கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தங்கள் இன்னுயிரை பணையம் வைத்து பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. 

  • Share this:
முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத் தொகையை அறிவித்துள்ள தமிழக அரசு இதற்காக ரூ.160 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஊரடங்கு காரணமாக தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது. தினசரி பாதிப்பும் குறைந்துள்ளது.  கொரோனா  பரவலை கட்டுப்படுத்துவதில் முன்களப் பணியாளர்களின் பங்கும் முக்கியமானதாகும்.

மருத்துவ, சுகாதாரத்துறை பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக செயலாற்றி கொரோனா பரவலை கட்டுக்கு வைக்க போராடி வருகின்றனர். கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தங்கள் இன்னுயிரை பணையம் வைத்து பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.  இவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில்,  கோவிட் தொடர்பான பணிகளில் 2021 ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டு பட்டு வரும் காலமுறை  ஊதியத்துடன் கூடிய அரசுப் பணியாளர்கள்,  ஒப்பந்த அடிப்படையில்  பணிபுரியும் பணியாளர்கள்,  அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணியாற்றிவரும்  தகுதி வாய்ந்த  பணியாளர்களுக்கு நிதித் தொகுப்பு வழங்குவதற்காக  ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: