இந்தியாவில் மொத்தமாக 382.. கொரோனா தொற்றால் தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு.. முழுவிவரம்..

பொது மருத்துவர்கள் புறநோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் போது யாருக்கு தொற்று உள்ளது என அறியாமல் இருந்திருக்கும் என்பதால் அவர்கள் தான் அதிகமாக உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த ஜெயலால் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் மொத்தமாக 382.. கொரோனா தொற்றால் தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு.. முழுவிவரம்..
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 11:54 AM IST
  • Share this:
தமிழகத்தில் 63 மருத்துவர்கள் கொரோனாவால் இற்ந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்தமாக 382 மருத்துவர்கள் இது வரை உயிரிழந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் 42 பேர், குஜராத்தில் 39 பேர், மகாராஷ்ட்ராவில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுசுகாதாரத்துறையின் முன்னாள் இணை இயக்குநர் மருத்துவர் மனோகரன், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலராக இருந்த மருத்துவர் சுகுமாறன் உள்ளிட்ட பல மூத்த மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.


இதில் காஞ்சிபுரத்தில் 2 பேர், கடலூரில் 2 பேர், சென்னையில் 24 பேர், கரூரில் ஒருவர், மயிலாடுதுறையில் இருவர், தஞ்சாவூரில் 4 பேர், மதுரையில் 7 பேர், வேலூர் ( ஆம்பூர்) ஒருவர், தேனியில் ஒருவர், விருதுநகரில் 5 பேர், தூத்துக்குடியில் 3 பேர், ராமநாதபுரத்தில் 2 பேர், கன்னியாகுமரியில் இரண்டு பேர், செங்கல்பட்டில் ஒருவர், திண்டுக்கல்லில் ஒருவர், கோவையில், திருச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் தலா ஒருவர், மற்றும் காரைக்காலில் ஒரு மருத்துவர் இது வரை கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 60 முதல் 69 வயதினராக இருந்தவர்கள். இந்த வயது பிரிவில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
30-39- ஒருவர்40-49- ஒருவர்50-59- 18 பேர்60-69- 28 பேர் 70-79- 8 பேர்80-89 - 7 பேர். இறந்த மருத்துவர்களில் பலர் பொது மருத்துவர்களாக இருந்துள்ளனர்.கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்புகள் இருந்திருக்கும். ஆனால் பொது மருத்துவர்கள் புறநோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் போது யாருக்கு தொற்று உள்ளது என அறியாமல் இருந்திருக்கும் என்பதால் அவர்கள் தான் அதிகமாக உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த ஜெயலால் தெரிவிக்கிறார். இவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அரசு எதுவும் செய்யவில்லை என வருத்தப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். அவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணமும் கிடைக்கவில்லை என கூறுகிறார்.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading