தேர்வுத்துறையில் நாலாவதாக ஒருவருக்கு கொரோனா - கலக்கத்தில் அதிகாரிகள்

தேர்வுத்துறையில் அடுத்தடுத்து அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது

தேர்வுத்துறையில் நாலாவதாக ஒருவருக்கு கொரோனா - கலக்கத்தில் அதிகாரிகள்
(கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: June 9, 2020, 6:39 AM IST
  • Share this:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தும் தேர்வுத் துறை இணை இயக்குனர் பொறுப்பில் உள்ள அதிகாரிக்கு,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேர்வுத்துறையில் ஏற்கெனவே 3 பேருக்கு தொற்று உள்ளது.  தற்போது தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரிக்கு தொற்று ஏற்பட்டிருப்பது, தேர்வுத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து தேர்வுத்துறையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது தேர்வுத் துறை அதிகாரிகளுக்கு தற்போது நோய்த்தொற்று ஏற்பட்டு வருவது பொதுத்தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள தேர்வுத் துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் சென்னையில் கொரோனா நோயின் திவிரம் அதிகரித்து வரக்கூடிய சூழலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்கிற கோரிக்கையினை அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் முன்வைத்து வரக்கூடிய நிலையில் பொதுத்தேர்வினை நடத்தும் தேர்வுத்துறை ஊழியர்கள் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also See: புதிய வகை கொரோனா வைரஸால் மேலும் ஆபத்தா? விஞ்ஞானி விளக்கம்


First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading