தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.’
மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 679 பேருக்கு ஒரே இடத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. மற்றவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.
இன்று கொரோனா தொற்று உறுதியானவர்களில் 4 பேருக்கு, எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதை விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை 21 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று டிஸ்சார்ஜ் ஆன ஒருவர் 72 வயதானவர்.
என்று தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.