தமிழகத்தில் 21,000க்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு: மொத்த உயிரிழப்பு 27 ஆயிரத்தை கடந்தது!

மாதிரிப் படம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை 21 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ள போதிலும் தினசரி உயிரிழப்பு தொடர்ந்து 400க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

  • Share this:
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 21 ஆயிரத்துக்கும் கீழாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. தமிழகத்தில் மே 2ம் தேதி தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது. அடுத்த பத்தே நாட்களில், மே 12ம் தேதி  தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது. இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்காக கடுமையாக்கப்பட்டது. இதையடுத்து. கொரோனா தினசரி பாதிப்பு குறைய தொடங்கியது.  அதன்படி, கடந்த மே 31ம் தேதி தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்தது. அன்றைய தினம் தினசரி பாதிப்பு 28,864  ஆக பதிவானது.

இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்துக்கும் கீழாக பதிவாகியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,421  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,37,233  ஆக அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 33,161  பேர் கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,65,939 ஆக உள்ளது. கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 434  பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு  ஆக 27,005 அதிகரித்துள்ளது. கோயம்புத்தூரில் அதிகபட்சமாக  2645 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில்1644   பேருக்கு கொரோனா தொற்றும், 50 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: