சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக விபரம்

அதிக பாதிப்பு, அதிக உயிரிழப்பு, அதிக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை என்று சென்னை முதலிடத்தில் உள்ளது. 

சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக விபரம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: May 23, 2020, 6:37 PM IST
  • Share this:
தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று மொத்தம் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 710 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 24 பேர், ராஜஸ்தானில் இருந்து 6 பேர், மேற்கு வங்கத்தில் இருந்து 3 பேர் டெல்லி, தெலங்கானா, உ.பி, ஆந்திர பிரதேசம் ஆகிய பகுதியில் இருந்து வந்த தலா ஒருவர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும், பிலிப்பைன்ஸில் இருந்து வந்த 5 பேர், லண்டனில் இருந்து வந்த 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 363 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் மொத்தமாக டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 7,915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னையில் இன்று 624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ராஜஸ்தானில் இருந்து வந்தவர். இதனால், சென்னையில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை  9,989 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக விபரங்கள்


அதிக பாதிப்பு, அதிக உயிரிழப்பு, அதிக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை என்று சென்னை முதலிடத்தில் உள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading