மே 10ம் தேதி முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

ரேசன் கார்டு

கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார்

  • Share this:
    கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக நேற்று பொறுப்பேற்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், 5 மக்கள் நல திட்டங்களுக்கான கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

    கொரோனா காலத்தில் அவதியுறும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும்  என்றும் முதல்கட்டமாக இந்த மாதமே ரூ.2000 வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

    சுமார் 2,07,67000  குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2000 ரூபாய் வீதம் நிவாரணத் தொகையை இந்த மாதம் முதல் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.  இது குறித்த அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

    10ம் தேதி முதல் டோக்கன் தரப்பட்டு தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் வீடு வீடாக அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். ரேசன் ஊழியர்கள் மட்டுமே டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபடுவர் என்றும்  டோக்கன் முறையாக தரப்படுகிறதா என கண்காணிக்க துணை தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: