இறந்து 3 நாளுக்குப் பின் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்று... அச்சத்தில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 300 பேர்...!

"கீழக்கரையில் முதியோரின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 தெருக்களுக்கான பாதைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன"

இறந்து 3 நாளுக்குப் பின் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்று... அச்சத்தில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 300 பேர்...!
கோப்புப்படம்
  • Share this:
சுவாசச் கோளாறால் காலமானாதாகக் கூறப்பட்ட 71 வயது முதியவர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா எனத் தெரியாமல் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்டோர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 71 வயது முதியவர், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இவர், துபாய் சென்று வந்த நிலையில், சுகாதாரத்துறை சார்பில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிலமணி நேரங்களிலேயே முதியவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து.


இதையடுத்து, முதியவரின் உடல், அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊரான கீழக்கரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வாகனத்தை பின்தொடர்ந்து உறவினர்கள் 10 பேர் தனி வாகனங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

முதியவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டதால் அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோர் தனிமனித விலகலை கடைப்பிடிக்காமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், முதியவரிடம் ஏற்கனவே எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது மூன்று நாட்களுக்குப் பின் இன்று தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது, இதனால், உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினர் மற்றும் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இதனிடையே, கீழக்கரையில் முதியோரின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 தெருக்களுக்கான பாதைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அத்துடன், அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



மேலும், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு மேற்கொண்டு, முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். பின்னர் பேசுகையில், இறுதிச் சடங்கில் பங்கேற்ற அனைவரும் அடையாளம் காணப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

இச்சம்பவம் குறித்து பேசிய ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ்கனி, கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழந்திருப்பதால் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்று சோதனை செய்ததில், ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர் இறந்த நிலையில், அவரின் ரத்த மாதிரி சோதனையை உறுதி செய்த பின்னர், உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து இருந்தால், இதுபோன்ற அச்சத்தை தவிர்த்து இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.






இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading