இரண்டு மாவட்டங்களில் இன்று அதிக கொரோனா தொற்று உறுதி...! மாவட்ட வாரியாக எண்ணிக்கை

கோப்புப் படம்

”மொத்தத்தில் 214 பேருடன் சென்னை முதலிடத்திலும், 126 பேருடன் கோவை இரண்டாவது இடத்திலும், திருப்பூர் மூன்றாவது இடத்திலும் உள்ளது”

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தேசிய அளவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

    தற்போது வரை, 1242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 14 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 37 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மாவட்ட வாரியாக எண்ணிக்கையில், இன்று திருவள்ளூர் மற்றும் நாகையில் தலா 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.



    மொத்தத்தில் 214 பேருடன் சென்னை முதலிடத்திலும், 126 பேருடன் கோவை இரண்டாவது இடத்திலும், திருப்பூர் மூன்றாவது இடத்திலும் உள்ளது.













    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankar
    First published: