கொரோனா இறப்பு விகிதம் - சென்னையை விட இந்த 6 மாவட்டங்களில் அதிகம்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்திருக்கும் சென்னையை விட 6 மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

கொரோனா இறப்பு விகிதம் - சென்னையை விட இந்த 6 மாவட்டங்களில் அதிகம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 14, 2020, 6:21 PM IST
  • Share this:
தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 66 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2032 (ஜுலை 18 வரை) ஆக உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏற்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளில் 1277 மரணங்கள் சென்னையில் நிகழ்ந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 165, திருவள்ளூரில் 129, மதுரையில் 120, காஞ்சிபுரத்தில் 52 மற்றும் ராமநாதபுரத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் இறப்பு விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால் சென்னை தமிழகத்தில் ஏழாவது இடத்தில்தான் உள்ளது. இந்த பாதிக்கப்பட்ட 78 ஆயிரத்து 573 பேரில் 1.63 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அதேசமயம் ராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

கரூரில் 202 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 5 பேர் உயிரிழந்தனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக இங்கு இறப்பு விகிதம் 2.48 சதவிகிதமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரத்தில் 2.01 சதவீதமாகவும், செங்கல்பட்டில் 1.99 சதவிகிதமாகவும், கிருஷ்ணகிரியில் 1.9 சதவிகிதமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருக்கிறது.

படிக்க: BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

படிக்க: ஈரானை அடுத்து இலங்கையும்...! ரத்தாகும் இந்தியா உடனான திட்டங்கள்


திருவள்ளூரில் 6 ஆயிரத்து 930 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதில் 129 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் அந்த மாவட்டத்தில் இறப்பு விகிதம் 1.86 சதவிகிதமாக உள்ளது. இதேபோல் மதுரையிலும் உயிரிழந்தவர்களின் விகிதம் 1.84 சதவிகிதமாக இருக்கிறது.

 
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading