Home /News /coronavirus-latest-news /

மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு? முதல்வர் - ஆட்சியர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன?

மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு? முதல்வர் - ஆட்சியர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன?

ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

  • News18
  • Last Updated :
    சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    பாதிப்பு அதிகமாகும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் அதிகம் பாதித்த மாவட்டங்களின் பட்டியலில் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களும் சேர்ந்துள்ளன.

    இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கருத்துக்களை கேட்டறிந்தார்.




    படிக்கசிறையில் தந்தை, மகன் மரணம் - சந்தேகத்தை எழுப்பும் போலீஸ் FIR


    படிக்கசென்னையில் அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்








    மேலும், மாவட்ட வாரியான சிசிச்சை விவரங்கள்? பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கில் கட்டுப்பாடு தளர்வுகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

    பல மாவட்டங்களில் பரவலாக பொதுப்போக்குவரத்து இயங்கிவரும் நிலையில், அதனை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    First published:

    Tags: CoronaVirus, Lockdown

    அடுத்த செய்தி