தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பா...? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் இனி புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படாது எனக் கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பா...? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: July 17, 2020, 7:35 PM IST
  • Share this:
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அணைகளை புனரமைக்கவும், சாலை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் 30 விழுக்காடு நிறைவடைந்திருப்பதாகக் கூறிய அவர், அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் இத்திட்டப் பணிகள் முழுவதும் நிறைவடையும் என்றார்

அதன்பின்னர் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்பிய வெளிமாநில தொழிலாளர்களை பேருந்துகள் மூலம் மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோரிக்கை வைத்தனர். காற்றாலை, சோலார் மின் உற்பத்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் சிக்கல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா காலத்தில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். மின் கட்டணத்தை நிர்ணயிப்பதில் எந்தவித குளறுபடியும் கிடையாது எனக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் திமுகவினர் வேண்டும் என்றே குற்றம்சாட்டி போராட்ட அறிவிப்பை வெளியிடுவதாக விமர்சித்தார்.
படிக்க: கொரோனா தொற்று உள்ளதா என 15 நிமிடங்களில் கண்டறியும் ஆன்டிபாடி சோதனை - பொதுமக்களுக்கு எப்போது?படிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..
ஐடிபிஎல் திட்டம் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும் என்றும், இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 100 விழுக்காடு இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என குறிப்பிட்ட அவர், இனி தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.

கொரோனா பரவலைத் தடுக்க வீடு வீடாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால், வரும் நாட்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையும் என்றும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading