கொரோனா மரணங்கள் - தினசரி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு..

தமிழகத்தில்  கொரோனா மரணம் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைத்து தலைமைச் செயலாளர்  உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா மரணங்கள் - தினசரி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு..
chief secretary
  • Share this:
சென்னையில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அமைக்கப்பட்ட மறு ஆய்வு குழு அறிக்கையின் அடிப்படையில் விடுபட்ட  444 மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில்  கொரோனா மரணம் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைத்து தலைமைச் செயலாளர்  உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி மருத்துவம் மற்றும் ஊரக மருத்துவ சேவைகள் இயக்குநர் தலைமையில், மருத்துவ கல்வி இயக்குனர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர், மற்றும் சென்னை மாநகராட்சி நல அலுவலர் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் “ஐ.சி.எம்.ஆர் விதிகளின் படி கொரோனா தொடர்பான இறப்பு முறையாக பதிவு செய்ய வேண்டும். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சமர்ப்பித்த தினசரி இறப்பு அறிக்கையை சரிபார்த்து, உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்படும் தகனம் மற்றும் மாயானங்களில் உள்ள பதிவுகளுடன் ஒப்பிட்டு, இறப்புகள் எண்ணிக்கை தவறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பான தினசரி மாநில அளவிலான குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இந்த குழு வாரந்தோறும் இறப்புகள் ஆய்வு செய்து எந்த இறப்பும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading