தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகவுள்ளதையடுத்து வெளியூர்களில் தங்கியுள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக இன்றும் நாளையும் 24 மணிநேரமும் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதால் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இம்மாதம் 24ம் தேதிவரை முழு ஊரங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு நாட்களில் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர். இதை தவிர வேறு
எந்த போக்குவரத்தும் செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது
இந்நிலையில், வெளியூர்களில் இருப்பவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இன்றும் நாளையும் 24 மணி நேரமும் பேருந்து போக்குவரத்து இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கை பயன்படுத்தி பயணிகளிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடக் கூடாது, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.
அதிக கட்டணம் வசூலித்தால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 10 ஆயிரம் ரூபாய் அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.