தமிழகத்தில் 4 மருத்துவமனைகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை ஆராய்ச்சிக்கான அனுமதி...! பிளாஸ்மா தானம் - யார் வழங்கலாம்...? யார் பெறலாம்...?

தேர்ந்தெடுக்கப்படும் கொடையாளர்களிடமிருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா எடுக்கப்படும்.

தமிழகத்தில் 4 மருத்துவமனைகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை ஆராய்ச்சிக்கான அனுமதி...! பிளாஸ்மா தானம் - யார் வழங்கலாம்...? யார் பெறலாம்...?
ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ‘ப்ளாஸ்மா’. (கோப்புப் படம்)
  • Share this:
பிளாஸ்மா தானம் யார் வழங்கலாம் என்றும் யார் பெறலாம் என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை ஆராய்ச்சிக்கான அனுமதி தமிழகத்தில் நான்கு மருத்துவமனைகளுக்கு கிடைத்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியாரில் வேலூர் சி எம் சி மருத்துவமனைக்கு இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

பிளாஸ்மா கொடையாளர்களை, நோயாளர்களை கண்டறிதல் போன்ற ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் அளிக்கலாம், யாரெல்லாம் பெறலாம் என்ற விவரங்களை தற்போது பார்க்கலாம்.

யார் யார் கொடையாளர்:

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டவராக இருக்க வேண்டும். பி சி ஆர் பரிசோதனையில் ஒரு முறை நெகடிவ் வந்திருந்தால் குணமடைந்து 28 நாட்கள் ஆகியிருக்க வேண்டும்28 நாட்கள் முன்பு தானம் பெறப்பட்டால், இரண்டு முறை பி சி ஆர் பரிசோதனை நெகடிவ் வந்திருக்க வேண்டும்.

அறிகுறிகள் இல்லாமல் 28 நாட்கள் ஆகியிருக்க வேண்டும்.
18 வயதுக்கு மேல், 55 கிலோ எடைக்கு மேல் இருக்க வேண்டும்.
குழந்தை பெற்றிருக்காத பெண்கள் மட்டுமே தானம் அளிக்க முடியும்.

எச் ஐ வி, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்று பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்யப்பட வேண்டும்.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் கொடையாளர்களிடமிருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா எடுக்கப்படும்.

ரத்தத்திலிருந்த் பிளாஸ்மா பிரித்து எடுக்கப்படும் மற்ற ரத்த கூறுகள் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படும். பல்வேறு நபர்களிடம் சேகரிக்கப்பட்ட பிளாஸ்மா ஒன்றாக சேமிக்கப்படாது.

யார் யார் பெறலாம்?

இந்த பிளாஸ்மா 18 வயதுக்கு மேலான கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் அவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகு.
ரத்த கூறுகளுக்கு ஏற்கெனவே ஏதேனும் அலர்ஜி இல்லாதவர்களாக இருக்க வேண்டும். கர்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படமாட்டாது.


Also see...
First published: May 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading