• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தமிழகத்தின் 22 மாவட்டங்களை ‘ஹாட் ஸ்பாட்’களாக அறிவித்த மத்திய அரசு...!

தமிழகத்தின் 22 மாவட்டங்களை ‘ஹாட் ஸ்பாட்’களாக அறிவித்த மத்திய அரசு...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

”கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகள் ஹாட் ஸ்பாட் என்று அழைக்கப்படுகின்றன”

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தின் 22 மாவட்டங்களை கொரோனா தொற்று அதிகம் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தேசிய அளவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

    தற்போது வரை, 1242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 14 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 37 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக ஊரடங்கை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ளதால், மேலும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகள் ஹாட் ஸ்பாட் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் கூடுதல் கவனம் எடுத்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

    தமிழகத்தின், சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    மேலும், தஞ்சை, திருவண்ணாமலை, காஞ்சி, சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக மாறலாம் என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.













    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: