Home /News /coronavirus-latest-news /

covid 19: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 94 பேர் மரணம்

covid 19: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 94 பேர் மரணம்

கொரோனா தடுப்புப் பணி

கொரோனா தடுப்புப் பணி

தமிழகத்தில் மொத்தமாக 1,07,145 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரேநாளில் 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,”தமிழகத்தில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாகாக 4,250 பேருக்கும் செங்கல்பட்டில் 1,142 பேருக்கும் கோவையில் 1,056 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,97,672 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 1,07,145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 31,142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 13,625 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 9,76,876 பேர் கொரோனாவிலிருந்து விடுப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த கொரோனா உயிரிழப்பு 13,651ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: COVID-19 Second Wave, Covid-19 vaccine, Tamilnadu

    அடுத்த செய்தி